(ஆர்.விதுஷா)

ஹொரணை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்துக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த சடலமான ஹொரணை வைத்தியசாலைக்கு முன்பாக காணப்படும் பஸ் நிலயைத்திற்கு அருகில் நேற்றைய தினம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் அவருடைய உயிரிழப்பிற்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் பாணந்துறை நீதிவான் நீதிமன்ற அனுமதியுடன் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.