ஹெரோயின், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்கொட பகுதியில் கடந்த வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய தெல்கொட- கந்துகொட பகுதியில் அமைந்துள்ள தியான மத்திய நிலையத்திற்கருகில் மேற்கொள்ளப்பட்ட வசேட சுற்றிவலைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் 75 கிராம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 0.38 வகை துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 06 துப்பாக்கி ரவைகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனையினை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.