ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவை ஜூலை மாதம் தொடக்கம் வழங்கவுள்ளதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்தார். இதற்கமைய பிரதேச செயலகங்களுடன் சேர்ந்து புதிய கொடுப்பனவு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்;.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியின் ஓய்வு பெற்ற சகலருக்கும் புதிய கொடுப்பனவு கிடைக்கும். இதன்மூலம் ஐந்து இலட்சத்து 80 ஆயிரம் பேர் வரை நன்மை பெறுவார்கள் என ஓய்வுதிய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.