தகவல் அறியும் உரிமை மூலம் பொது மக்கள் நலன் சார்ந்த செய்தியை வெளியிட்ட வட மாகாண ஊடகவியலாளர் மூவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

59 ஊடக ஆக்கங்களை சமர்ப்பித்திருந்த 19 ஊடகவியலாளரிடையே முதல் மூன்று ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ் ஊடக ஆக்கங்கள் செப்டம்பர் 2018 முதல் ஜனவரி 2019 ஆகிய காலப்பகுதியில் பதிப்பிக்கப்பட்ட அல்லது ஒளி, ஒலிபரப்பப்பட்ட ஊடக ஆக்கங்கள் ஆகும்.

 அந்த வகையில் முதல் இடத்தை தினகரன் பத்திரிகையை சேர்ந்த இணைய ஊடகவியலாளரான யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த குமாரசாமி செல்வகுமார் பெற்றுக்கொண்டார். 

வாகிசம் இணைய ஊடகவியலாளரான கோண்டாவிலைச் சேர்ந்த அருமைதுரை யசிகரன் இரண்டாவது இடத்தையும் , வீரகேசரி பத்திரிகை மற்றும் இணையத்தள செய்தி நிருபரான முல்லைத்தீவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை குமணன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த மூன்று வெற்றியாளர்களும் கடந்த 05 ஆம் திகதி யாழ்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வடமாகான ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் இருந்து தமக்கான சன்றிதழ்கழையும் கேடயங்களையும் பெற்றுக்கொண்டனர்.

 இம் மூன்று வெற்றியாலர்களும் தகவல் அறியும் உரிமை எவ்வாறு  இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பில் அறிய விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.