(எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்றத்தை பிழையாக வழிடத்திய நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்ததன தெரிவித்தார்.

அத்துடன் புத்தாண்டுக்கு பின்னர் நம்பிக்கையிலா பிரேரணை தொடர்பான தகவல்களை கட்சி தலைவர்களிடம் கையளித்து, பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புஞ்சி பொரளையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பரிவர்த்தன கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.