(செய்திப்பிரிவு)

கேகாலையில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கேகாலை புலத்கொஹபிட்டிய பிரதான வீதியில் ஹெட்டிமுல்ல நோக்கி  பயனித்த முச்சக்கர வண்டி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

பலத்தகாயமடைந்த மோட்டார் சைக்கில் சாரதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு  கொண்டுவரப்பட்ட  நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரனமடைந்தவர் கங்கிரிய வீதி, ஹெட்டிமுல்ல எனும் முகவரியில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.