கட்சியை பிளவுப்படுத்தாது மே தின பேரணியில் கலந்துக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசியல் தலைவர்களுக்கும் பணிவான வேண்டுகொள் விடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் பேரணியின் முன்னாள் தலைவர் சாந்த பண்டார தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் தனிபெரும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியியை வளர்க்க வேண்டிய தேவை இருப்பதனால் தற்போதுள்ள தேசிய அரசாங்க முறைமை எவ்விதத்திலும் நன்மையளிக்காது எனவும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டிணைந்து நாட்டை கொண்டு செல்வதில் விருப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

(பா.ருத்ரகுமார்)