கருந்துளையின் முதல் புகைப்படம் வெளியானது

Published By: Digital Desk 3

11 Apr, 2019 | 11:36 AM
image

விண்வெளியில் காணப்படும் கருந்துளையின் முதல் புகைப்படத்தை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டனர்.

விண்வெளியில் அதிபயங்கர ஈர்ப்பு சக்தியுடன் கூடிய ‘பிளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளைகள் உள்ளன.

மிகப்பெரிய நட்சத்திரங்களை கூட உள்ளிழுக்கும் சக்தி இந்த கருந்துளைகளுக்கு உள்ளன. இந்த கருந்துளையை ஆய்வு செய்ய  2017 இல் சர்வதேச அளவில் ஈவென்ட் ஹாரிசன் தொலைநோக்கி திட்டம் உருவாக்கப்பட்டது. 

ஹவாய்,  அரிசோனா, ஸ்பெயின், மெக்சிக்கோ, சிலி உள்ளிட்ட உலகின் பல இடங்களில் 8 ரேடியோ டெலஸ்கோப்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் திட்டம் தான் ஈவென்ட் ஹாரிசோன். 

இந்த ஆய்வுத் திட்டம் மூலம் 50 மில்லியன் ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ள எம்-87 என்ற நட்சத்திர கூட்டத்தில் உள்ள கருந்துளை ஆராயப்பட்டது.

8 டெலஸ்கோப்களின் தகவல்களை ஒருங்கிணைத்து கருந்துளையின் இயற்கையான போட்டோ எடுக்கப்பட்டது. இது வரை கருந்துளையின் இயற்கையான புகைப்படம் வெளியானதில்லை.

வெறும் வரைபட  வடிவமாகவே வெளிவந்து கொண்டிருந்தது. எம் - 87 நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள கருந்துளையின் இயற்கையான புகைப்படத்தை விஞ்ஞானிகள் நேற்று முதன் முதலாக வெளியிட்டனர்.

பிரசெல்ஸ், ஷங்காய், டோக்கியோ, வாஷிங்டன், சாண்டியாகோ மற்றும் தைபே ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த கருந்துளையின் புகைப்படம் வெளியிடப்பட்டது.

ஒரஞ்சு மற்றும் வெளிறிய வாயுக்களின் மத்தியில் இந்த கருந்துளை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26