கண்ணில் உயிருடன் இருந்த 4 தேனீக்களை வைத்தியர்கள் அகற்றி சாதனை

Published By: Daya

11 Apr, 2019 | 10:03 AM
image

தாய்வான் பெண்ணின் கண்ணில் இருந்த 4 தேனீக்களை வைத்தியர்கள் நூதனமாக எடுத்து, அந்தப் பெண்ணின் கண்ணுக்கு எந்த பாதிப்பும் இன்றி காப்பாற்றியுள்ளனர். 

 தாய்வானில் ஹீ என்ற 29 வயதான பெண் கடந்த வாரம் தனது உறவினரின் கல்லறைக்கு சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது கண்களில் அரிப்பு மற்றும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.  

இதையடுத்து கைகளை கொண்டு வழக்கம்போல கண்களை கசக்கியுள்ளார். தொடர்ந்து வலி ஏற்படவே கண்களை கழுவியுள்ளார். சரிவரவில்லை. மறுநாள்  அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று  வைத்தியரைஅணுகியுள்ளார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியர்கள் கூறுகையில்,

கண்களில் ஏதோ பூச்சியின் கால்கள் இருப்பது போல் இருந்தது. மைக்ரோஸ்கோப் மூலம் எடுத்துவிடலாம் என பார்த்தேன். அப்போது 4 தேனீக்கள் உள்ளே இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் மெதுவாக அவரது கருவிழிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி தேனீக்களை எடுத்தேன். அவை உயிருடன் இருந்தன. உலகிலேயே இது தான் முதல் நிகழ்வு என நினைக்கிறேன். என தெரிவித்துள்ளார். 

இதையடுத்து 5 நாட்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 80% பார்வை சரிசெய்யப்பட்டுள்ளது. பார்வையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என டாக்டர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47