ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் இலங்கையின் 69 பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

தெற்கு சூடானில் மாத்திரம் இலங்கை அதிகாரிகள் தற்சமயம் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 18 அதிகாரிகள் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. புதிதாக தெரிவு செய்யப்படவிருக்கும் அதிகாரிகள் தெற்கு சூடான், யெமன், மாலி ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படவிருக்கிறார்கள்.