வீதியின் அருகே படுத்திருந்தவரின் கால்களின் மீது ரிப்பர் வாகனம் ஏறியதால் அவர் படுகாயமடைந்த நிலையில். கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் மாங்குளம் ஏ9 வீதியில் பனிக்கன் குளம் பகுதியில் இன்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றது.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபரே இந்தச் சம்பவத்தில் கால்கள் சிதைவடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டியில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படார். 

அவர் மதுபோதையில் வீதியில் படுத்திருந்தாரா என்பது தொடர்பில் மருத்துவரின் அறிக்கையின் பின்னரே தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.