மின்வெட்டு இன்று இரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்படும் ; ரவி கருணாநாயக்க 

Published By: Digital Desk 4

10 Apr, 2019 | 05:36 PM
image

நாடு முழுவதிமுள்ள மின்வெட்டு இன்று இரவுடன் முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை சமன் தேவாலயத்திற்கு சென்று மழை வேண்டி பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்ட அமைச்சர், அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் மின்சார தேவை மக்களின் அடிப்படை தேவையாக இருப்பதால் இதன் மூலமாக ஏற்பட்டிருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் நான் ஆராய்ந்துள்ளேன்.

குறைந்த செலவில் பொதுமக்களுக்கு மின்சார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நடவடிக்கைகளை மின்சார சபை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுக்க நான் முன்வந்துள்ளேன்.

அதேநேரத்தில் இன்று இரவு முதல் நாடு முழுவதிலும் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் மின்சார தடையை விலக்கி மக்களுக்கு மின்சாரம் தடையின்றி வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.

மஸ்கெலியா லக்ஷபான நீர்மின் உற்பத்தி அபிவிருத்தியின் போது இந்த அபிவிருத்தி திட்டம் முறையாக நடைபெற வேண்டும் என சமன் தேவாலயத்தில் நேத்திக்கடன் வைக்கப்பட்டது.

அந்த நேத்திக்கடனை இன்று நிறைவேற்ற அப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளேன். அதேநேரத்தில் எதிர்வரும் காலங்களில் மக்கள் மின்சார பாவனையில் சிக்கனமாக ஈடுப்பட வேண்டும் என விசேடமாக வலியுறுத்துகின்றேன் என தெரிவித்த அமைச்சர்,

இங்கிலாந்தில் தேங்காய் ஒன்று மரத்திலிருந்து விழுந்தால் இது ஆளுங்கட்சியின் ஏற்பாடு என்று குறை கூறுகின்றார்கள். ஆனால் எதிர்கட்சியை விட ஆளுங்கட்சியின் ஊடாகவே மக்கள் பிரச்சினையை தீர்க்கப்பட வேண்டும் என நாம் முயல்கின்றோம்.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்படும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சதியா என கேட்டபோது,

இலங்கை நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தீர்க்கப்படாத நிலையில் அமெரிக்காவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. இது தொடர்பில் விளக்கமளிக்க நான் தயார் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17