(நா.தினுஷா)

கடன் சுமை அதிகரிப்பினால் வர்த்தக அபிவிருத்தியை கட்டியெழுப்புவதில் பாரிய சவால் நிலை உருவாகியுள்ளது. கடன் சுமை அதிகரிப்பின் காரணமாக வங்கி கடன்களின் வட்டி வீததத்திலும் பெருமளவும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்கு கடந்த வருடத்துடன் தீர்வினை வழங்க எண்ணியிருந்தோம். ஆனால் வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமைளினால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போயிருந்தது. 

இருப்பினும் தற்போது சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பயனாளிகளின் நலன்கருதியும் வங்கி கடன் வட்டி வீதத்தை அடிப்படை புள்ளி 200 வீதத்தால் குறைக்க  தீர்மானித்துள்ளதுடன் அதற்கான சூழ்நிலைகள் கைகூடி வந்துள்ளதாகவும் வட்டி வீத்ததை குறைப்பதற்கான நிதி சபையின்  அனுமதி கிடைத்தவுடன் வங்கி கடன் வட்டி வீதம் குறைவடையும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன் கிழமை அலரிமாளிகையில் ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது. இதன்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும் வங்கி கடன் வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பில் நிறைவேற்று அதிகாரிகள், கணக்காய்வு திணைக்களத்தின் உறுப்பினர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட தரப்பினரிடம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

விசேடமாக இந்த பேச்சுவார்ததையின் போது அதிகப்பட்ச வட்டி வீதத்தை எவ்வாறு குறைப்பது தொடர்பிலும்  அதற்கு எடுக்கவேண்டிய வலிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.