(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜனவுடன் மாத்திரமின்றி ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்காவிட்டால் அது அவர்களுக்கு பாரிய விளைவை தோற்றுவிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

 பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பில் அதிருப்தியுடனேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாக சுந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தயாசிறி ஜயசேகர ஒரு நகைசுவையாளர் போன்று கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் கடந்த காலங்களில் தனது தேவைக்கேற்ப அடிக்கடி கட்சி விட்டு கட்சி தாவிய ஒருவராவார். தற்போது மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்வதற்கு முயற்சிக்கின்றார். அதனாலேயே இவ்வாறு மஹிந்த தரப்பை குறை கூறிக் கொண்டிருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.