கழிவு முகாமைத்துவத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 03 அமைச்சர்களுடன் கூடிய குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபை, மாநாகர மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பொது விநியோகம் அமைச்சரவை அங்கீகாரமற்ற அமைச்சர்கள் குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கழிவுகளை உரிய முறையில் முகாமைப்படுத்தாமை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.