அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா கட்டாயம் கைது செய்ய வேண்டும் என அமெரிக்காவில் உள்ள முக்கிய இரண்டு தமிழ் குழுக்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளன.

போர்க் குற்றவாளிகளில் பிரதான நபராக காணப்படும் கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா கட்டாயம் கைது செய்யவேண்டும். கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்க கைது செய்யாவிட்டால் போர்குற்றங்களில் ஈடுபட்ட ஏனைய குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக அமைந்து விடும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.