ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இடம்பெற்ற புதிய கூட்டணி அமைப்பது தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுள்ளது.

அத்தடன் இது தொடர்பான நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முன்னெடுக்க இதன்போது தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.