15 வய­து­டைய பாட­சாலை மாணவி ஒரு­வரை தனியார் பேருந்து ஒன்­றினுள் வைத்து பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த பேருந்தின் நடத்­துநர் ஆன­ம­டுவ பொலி­ஸா­ரினால் கைது  செய்­யப்­பட்­டுள்ளார். நேற்­று­முன்­தினம்(08.04.2019) மாலை இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். 

ஆன­ம­டுவ - மஹ­உஸ்­வெவ பகு­தியை சேர்ந்த 28 வய­து­டைய திரு­ம­ண­மான ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளான பாட­சாலை மாணவி மேல­திக வகுப்­பிற்கு செல்­வ­தற்­காக ஆக­ம­டுவ நக­ரிற்கு வருகை தந்­துள்ளார். 

இதன்­போது சந்­தேக நபர் குறித்த மாண­வியை ஏமாற்றி தனது பேருந்­தினுள் அழைத்து சென்று பேருந்­திற்குள் வைத்தே துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ள­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களை தெரி­ய­வந்­துள்­ளது. 

துஷ்­பி­ர­யோத்­திற்கு உள்­ளான மாணவி நடந்த சம்­பவம் தொடர்பில் தனது தாயிடம் தெரி­வித்­துள்ளார். 

அத­ன­டிப்­ப­டையில் குறித்த மாண­வியின் தாய் செய்த முறைப்­பாட்­டிற்கு அமைய சந்­தேக நப­ரான பேருந்து நடத்­துநர்  கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.