கனிய மணல் அகழ்வை நிறுத்தக்கோரி வாகரையில் ஆா்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

10 Apr, 2019 | 03:41 PM
image

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கனிய மண் அகழ்வு  தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்துமாறு வலியுறித்தி இரண்டாவது தடவையாக இன்று புதன் கிழமை (10) காலை பிரதேச மக்களால்  வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிரவெளி பிரதேச மக்கள் மற்றும் சமூக மட்டஅமைப்புக்களால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பு திருமலை வீதியில் கூடிய மக்கள் வாகனப் பேரணியாக கதிரவெளியூடாக சென்று பணிச்சங்கேணி பிரதேசத்திகு சென்று அங்கிருந்து மீண்டும் வாகரை பிரதான வீதி ஊடாக வாகரை பிரதேச செயலகத்தினை சென்றடைந்து வீதியில் நின்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வீதியில் நின்ற பொதுமக்களுக்கு கணியமணல் தொழிற்hலை அமைப்பதினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டன.

மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான பால்சேனை வடக்கு தொடக்கம் வெருகல் வரையான கதிரவெளி, புதூர், புச்சாக்கேணி, ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கனிய மணல் அகழ்வு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் ஆரம்ப வேலைகள் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமக்கு எந்த விதமான தெளிவூட்டல்களும் இல்லையென்றும். இவ் தொழிற்சாலை அமைப்பதனால் சூழல்பாதிப்பு, பௌதீக சூழலான  நீர்ச் சூழல், நிலச் சூழல்,வளிச் சூழல், பாதிப்படைவதாகவும், கடல் வளம் பாதிப்படையும் என்றும் நிலத்தடி நீர் பாதிப்பிற்குள்ளாகி எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை பாதிப்படையும் என்றும் தெரிவிக்கின்றனர்.  

இதன்போது கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதேச செயலாளர் எஸ்.கரனிடம் கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காக சமர்ப்பிப்பதாக கருத்து தெரிவித்தார். 

இதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58