எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டனர் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட தமிழகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த நான்கு மீனவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் அ. ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், இராமேஸ்வரத்தில் இருந்து  மீன்பிடிக்க வந்திருந்த  முருகேசன்,முனியாண்டி, ரெனிசன்,சுப்பைய்யா உள்ளிட்ட  நான்கு மீனவர்களை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட  மீனவர்களை வைத்திய சோதனைக்கு பின் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

அதனை தொடர்ந்து கடற்தொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள்  குறித்த மீனவர்களை  ஊர்க்காவற்துறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் வீட்டில் ஆஜர்படுத்தி வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை அடுத்த மாதம் 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.