(எம்.எப்.எம்.பஸீர்)

டுபாயில் கைதான மாகந்துரே மதூஷின் சகாக்கள் என சந்தேகிக்கபப்டும், டுபாயிலிருந்து  நாடு கடத்தப்பட்ட பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால்  பொறுப்பேற்கப்பட்ட மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் விடுவிக்கப்ப்ட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவரிடம் 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் 

மொஹமட் முபார் மொஹமட் ஜபீருக்கு எதிராக எவ்வித குற்றச்செயல்களும் பதிவாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்நிலையிலேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

எனினும், அவருடன் நாடு கடத்தப்பட்ட கொழும்பு குற்றத் தடுபுப் பிரிவினரின் பிடியின் கீழ் உள்ள 37 வயதான மொஹமட் நஸீம் மொஹமட் பைஸர் என்பவர் தொடர்ந்தும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெறிவித்துள்ளது. அதன் பின்னர் அவரை கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கபப்டும் என  பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.