நாம் தும்மும் போது நடப்பது என்ன.?

27 Nov, 2015 | 11:18 AM
image

நமது மூக்கின் நாசித்துவாரத்தில் உள்ள முடியிழைகள், நாம் காற்றின் மூலம் உள்ளிழுக்கும் தூசு, துகள்களை வடிகட்டும் பணியை மேற்கொள்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மென்மையான சவ்வுப்படலம், நிறமற்ற திரவத்தை சுரக்கிறது.

அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்பட்டு, உடனே அவற்றை வெளித்தள்ளும் முயற்சியில் சவ்வுப் படலம் அதிக அளவு நீரைச் சுரக்கும்.


இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து சுவாசப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித்தள்ளுகின்றன. இதுவே தும்மல் ஆகும். 


தும்மும்போது ஏதேனும் தொற்றுக்களினால் நாம் பாதிக்கப்பட்டிருந்தால், அவை மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது. இதனால் தும்மும்போது, ஏதேனும் ஒரு சிறிய மெல்லிய துணியால் மூக்கினை மூடிக்கொண்டு தும்ம வேண்டும்.


நாம் தும்மும்போது மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளியாகும் திரவத்தின் வடிவங்களின் அளவுகளை வரைபடமாக அமெரிக்க ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளார்கள்.
திரவத்தின் நுண்ணிய வடிவங்களின் அளவுகளை தீர்மானித்து, அவை எப்படி நோய்க்கிருமிகளை பரப்புகிறது என்று கண்டறிய முடியும் என்றும் தும்மலின் பரவலைக்கட்டுப்படுத்துவது இதன் நோக்கம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-27 14:02:39
news-image

வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2023-05-26 18:10:38
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2023-05-26 12:25:04
news-image

சொரியாடிக் ஒர்த்தரடிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-24 15:50:08
news-image

தொடையின் பின்பகுதியில் ஏற்படும் வலிக்கான நிவாரண...

2023-05-23 11:07:06
news-image

கர்ப்பிணிகளுக்கான சுவாசிக்கும் டெக்னிக்ஸ்!

2023-05-20 19:53:27
news-image

சின்னம்மை (Chicken Pox)

2023-05-20 19:55:40
news-image

ஞாபகசக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

2023-05-20 13:59:49
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7...

2023-05-20 14:00:24
news-image

காது… மூக்கு… தொண்டை… பிரச்சினைகள்

2023-05-19 14:36:24
news-image

நடைப்பயிற்சி நல்லது!

2023-05-19 13:00:50
news-image

சிறுநீர் காட்டும் உடல் ஆரோக்கியம்!

2023-05-19 12:43:45