இன்று நள்ளிரவிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள பஸ் மற்றும் ரயில் சேவையாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக,  பஸ் மற்றும் ரயில்வே ஊழியர்களின் எந்தவொரு போராட்டத்திற்கும் முகங்கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தயார் என பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பண்டிகைக் காலத்தில் இதுமாதிரியான, பொது மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தக் கூடாது எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.