பொலிஸ் நிலைய களஞ்சியசாலையில் இருந்த 2 கைதுப்பாக்கிகள் மாயம்

Published By: Digital Desk 4

09 Apr, 2019 | 04:27 PM
image

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பொலிஸ் வலையத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் துப்பாக்கி களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வூ.டீ. சுகத்தபால தெரிவித்தார்.

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கி களஞ்சியசாலையானது குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு இருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாகவும், கடந்த 23 ஆம் திகதி அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்தசிறியிடம் அறிவிக்கபட்டதாகவும் குறித்த நிலையத்தின் களஞ்சியசாலையில் இருந்த 2 கைதுப்பக்கிகளை பொலிஸ் உத்தியோகத்தர் மீது தனிபட்ட விரோதத்தில் இருக்கும் யாராவது 2 கைதுப்பாக்கிகளை எடுத்து மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

காணாமல் போன கைதுப்பாக்கி தொடர்பில் பொலிஸ் அத்தியட்சரின் தலைமையில் விசாரனைகளை இடம்பெற்று வருவதோடு, எம்.34 என்ற வகையினை கொண்ட கைதுப்பாக்கிகளே இவ்வாறு காணாமால் போயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-22 06:08:19
news-image

மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப்...

2025-04-22 01:51:07
news-image

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...

2025-04-21 23:18:09
news-image

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

2025-04-21 23:10:54
news-image

அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ...

2025-04-21 19:57:04
news-image

மட்டு. சங்குலா குளத்தை தனிநபர்கள் சேதப்படுத்தியதால்,...

2025-04-21 22:15:04
news-image

பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர்...

2025-04-21 15:48:26
news-image

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்...

2025-04-21 19:54:29
news-image

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் மறைவுக்கு...

2025-04-21 20:07:44
news-image

பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்ட...

2025-04-21 19:48:28
news-image

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார்...

2025-04-21 19:44:36
news-image

திருகோணமலையில் கடந்த கால ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்ட...

2025-04-21 20:11:44