அமெரிக்காவில் ஒரே விமானத்தை இயக்கிய தாய் மற்றும் மகள் இருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் இயங்கிவரும் டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் இருந்து வைத்தியரான ஜோன் வாட்ரெட் என்பவர் லொஸ்ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டாவுக்குப் பயணித்தார்.

அப்போது  விமானசெலுத்தும் குழுவில் இருந்த பெண்கள் இருவரும் அம்மா- மகள் என்பதைத் தெரிந்துகொண்டார். 

தாய் வென்டி ரெக்ஸன் விமானத்தின் கப்டனாகவும் மகள் கெல்லி ரெக்ஸன் விமான செலுத்துபராகவும்  பணியாற்றினர்.

பெண்கள் இருவரையும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களான டுவிட்டரில் பகிர்ந்தார் ஜான் அந்தப் படம் இணையத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு குறித்த இருபெண்களின் திறமைகளை பாராட்டி பலர் அவர்களுக்கு வாழ்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.