டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துரே மதூஷ்  மற்றும் கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின்  போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய முக்கிய நபரொருவர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, மோதரை பகுதியில் வைத்து வெல்லே சாரங்க என்று அழைக்கப்படும் சாரங்க பிரதீப் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெல்லே சாரங்க இன்று பொலிஸாரினால் கைதுசெய்யப்படும் போது அவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.