குடிநீரில் கடல்நீர் கலந்துள்ளதால் குடிநீரை அருந்துவதை தவிர்க்குமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

களுகங்கையில் கடல் நீர் கலந்துள்ளதன் விளைவாகவே குடிநீரை அருந்த வேண்டாமென மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களுத்துறை பகுதியில் அமைந்துள்ள கீத்கென குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்படும் நீரை மாத்திரமே பருகவேண்டாமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.