இலங்கையில் முதல் ஸ்தானத்தில் உள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாகத் திகழும் Huawei, தனது பாவனையாளர்கள் அவர்களது புகைப்பட திறமைகளைக் காண்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் '“Beautiful Sri Lanka” என்ற தலைப்பில் வியப்பூட்டும், புகைப்பட போட்டியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

முகநூல் பாவனையாளர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொள்ள முடிவதுடன், https://www.facebook.com/notes/huawei-mobile/huawei-beautiful-sri-lanka-photography-competition/2013085655457184/ ஊடாக அதனைக் கண்டறிய முடியும்.

அழகிய இலங்கையின் கண்ணைக்கவரும் காட்சிகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இப்புகைப்பட போட்டியின் கருப்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தத்ரூபமான இயற்கை அழகை வசப்படுத்துவதில் தீவிர ஆர்வம் கொண்ட அனைத்து மொபைல் புகைப்படவியலாளர்களும் இப்போட்டியில் பங்குபற்றி Huawei வழங்கும் விசேட பரிசுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 

இதில் பங்குபற்றுகின்றவர்கள் Huawei ஸ்மார்ட்போன் மூலமாக தாங்கள் வசப்படுத்துகின்ற மிகச் சிறந்த புகைப்படங்களை அவற்றின் காப்புரிமை அடையாளத்துடன் மார்ச் 28 முதல் மே 24 வரையான காலப்பகுதியில் முகநூலில் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியும் அல்லது #ReWriteTheRulesOfPhotography#HuaweiSriLanka என்ற hashtags இனை உபயோகித்து பகிர்ந்து கொள்ள முடியும். அதனைத் தொடர்ந்து தமது பெயர், தொடர்பு கொள்ளும் இலக்கம் மற்றும் Huawei ஸ்மார்ட் சாதனத்தின் IMI இலக்கம் ஆகியவற்றுடன், புகைப்படத்தின் இணைப்பினை inbox செய்ய முடியும்.

இப்போட்டியில் முதல் 20 இடங்களுக்கான வெற்றியாளர்களை நடுவர்கள் குழு தெரிவு செய்யும். இப்புதிய கருப்பொருள் தொடர்பில் Huawei நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு கருத்து வெளியிடுகையில்,

 'இலங்கை நாடு அதன் மக்கள், இயற்கை மற்றும் தனித்துவமான கலாச்சாரம் தொடர்பில் அபரிமிதமான வரப்பிரசாதங்களைக் கொண்டுள்ள ஒரு தேசமாகும். இப்போட்டியானது அபிலாஷை கொண்ட புகைப்படவியலாளர்களுக்கு வெகுமதி அளிப்பது மட்டுமன்றி, தேசத்தில் மொபைல் புகைப்பட கலாச்சாரத்தை விருத்தி செய்து அந்த புகைப்படவியலாளர்கள் தொழில்ரீதியான புகைப்படவியலாளர்களாக வளர்ச்சி காண்பதற்கு உதவும் நோக்கினையும் கொண்டுள்ள ஒன்றாகவே நாம் இதனைக் கருதுகின்றோம்ரூபவ்' என்று குறிப்பிட்டார்.

இப்போட்டியின் வெற்றியாளருக்கு புத்தம்புதிய Huawei P30 lte மொபைல் தொலைபேசி வழங்கப்படவுள்ளதுடன், இறுதிப் போட்டியில் தெரிவு செய்யப்படுகின்ற ஏனையோருக்கு 5 Huawei Watch GTs, 10 Freebuds மற்றும் ஆறுதல் பரிசுகள் உட்பட பல பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

புகைப்படவியலில் தீவிர ஆர்வத்துடன் Huawei சாதனமொன்றை சொந்தமாகக் கொண்டுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் முகநூலின் ஊடாக Beautiful Sri Lanka போட்டியில் பங்குபற்றி வியப்பூட்டும் பரிசுகளை வெல்ல முன்வருமாறு Huawei அவர்களுக்கு அழைப்பு விடுகின்றது.

2019 ஆம் ஆண்டில் கட்டாயமாக புகைப்படம் எடுக்க வேண்டிய ஒரு பிரயாண நாடாக அண்மையில் கொழும்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் புதிய P உற்பத்தி வரிசை அறிமுகத்தைக் கொண்டாடுவதற்கு புகைப்படம் எடுப்பதில் பிரயாணிகள் மிகவும் விரும்பிய இடமாக கொழும்பு நகரம் காணப்பட்டமை Huawei முன்னெடுத்த ஆய்வொன்றின் மூலமாக

கண்டறியப்பட்டுள்ளதுடன், 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட சமூக ஊடக பதிவுகளும் காணப்பட்டன.