குளவி கொட்டுக்கு இலக்காகி 21ஆண் தொழிலாளர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

திம்புள்ள - பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் தோட்டபகுதியில் 05ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 21ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கொட்டகலை பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை 11மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

குறித்த தோட்டபகுதியில் உள்ள 05ம் இலக்க தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்த குளவி கூடு கலைந்ததன் காரணமாகவே குறித்த தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளானதாக பாதிக்கபட்ட  தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.