(ஆர்.விதுஷா)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த விபத்து இதன்று அதகாலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

கடவத்தையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த லொறியொன்றின் பின்புறமாக மோதியமையினாலேயே இந்த விபத்து சம்பவத்துள்ளது.

இதனால் படுகாயமடைந்த வேன் சாரதி உள்ளிட்ட ஐந்து பேர்   நாகொடை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்தவர் 63வயதுடைய பிலியந்தலை பகுதியை சேர்ந்த   ரணசிங்க  குணவர்தன  என அடையாளம்  காணப்பட்டுள்ளது. விபத்தில் சிக்குண்ட மேலும் நால்வர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.