முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான கே.குமணனின் "உத்தரிப்புக்களின் அல்பம்" காட்சிப்படுத்தல் 2 என்னும் ஒளிப்பட கண்காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை  முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

முல்லைத்தீவை சேர்ந்த இளம் ஊடகவியலாளரான கே .குமணன் கடந்த இரண்டுவருடங்களாக இடம்பெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  போராட்டங்களில் தன்னால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் தெரிவுசெய்யப்பட்ட ஒளிப்படங்களை வைத்து முறைப்படுத்தப்பட்ட விதத்தில் கண்காட்சியாக நடத்திவருகின்றார்.

இதன் ஒரு அங்கமாக கடந்த மாதம் யாழ் பொதுநூலகத்துக்கு முன்பாக குறித்த காட்சிப்படுத்தலை மேற்கொண்டிருந்தார் .

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இறுதி போரின்போது பல நூறுக்கணக்கானவர்களை இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்படட  இடமான வட்டுவாகல் பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழைமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கண்காட்சியாக நடத்தினார்.

குறித்த கண்காட்சியை அரசியல்வாதிகள் ,பொதுமக்கள் ,தென்பகுதியை சேர்ந்தவர்கள்,வெளிநாட்டவர்கள் என பெரும்பாலானோர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.