அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பஸ் நிலைய வியாபாரிகள்

Published By: Digital Desk 4

09 Apr, 2019 | 12:19 PM
image

யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அமைதிவழிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முன்றலில் அவர்கள் இந்தப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளது.

அதனால் அதன் பணிகளை ஆரம்பிக்க உள்ள நிலையில் பஸ் நிலையத்தைச் சூழ பழக்கடைகள் உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் 63 வியாபாரிகளை வரும் 30ஆம் திகதியுடன் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 63 வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் எடுத்து மாற்று இடத்தை ஒதுக்கித் தருமாறு கோரி வியாபாரிகள் அமைதிவழிப் போராட்டத்தை இன்று ஆரம்பித்தனர்.

தமது கோரிக்கையை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் நிறைவேற்றும் வரை தமது போராட்டம் தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் வலுசக்தி...

2026-03-15 19:54:34
news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52