சென்னையில் வங்கி ஒன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் 1.14 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த நபரொருவருக்கு 30 வருட கடூழியச்சிறைத் தண்டனை விதித்து சென்னையிலுள்ள போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னையில்வைத்து போதைப்பொருளை கைப்பற்றினர். 

இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2009 ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு 30 வருட கடூழிச்சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீரப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.