2,500 வருடத்திற்கு  முற்பட்ட மனித மம்மிகளின் உடல் எகிப்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மனித மம்மிகளின் உடலை சுற்றி எலிகள் உள்பட மற்றய விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் ஆராய்ச்சியின் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மம்மிகள்  புதைக்கப்பட்டுள்ள அறையை சுற்றியுள்ள சுவர் முழுவதும் இறுதிச் சடங்குகள் குறித்த ஓவியங்களும்,வாசங்களும் எழுதப்படுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2,500 ஆண்டுகள் பழமையான இக் கல்லறையானது, முற்காலத்தில் எகிப்தின் உயரதிகாரியாக இருந்த டுட்டு மற்றும் அவரது மனைவிக்கான ஓய்வெடுக்கும் பகுதியாக விளங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ஆராய்ச்சிகளின் பின்  எதிர்காலத்தில் குறித்த பகுதியானது சுற்றுலா பயணிகளை அதிகமாக கவரக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.