சகோதரனின் மர்ம உறுப்பை துண்டித்து, கொன்ற சகோதரி: கடைக்குச் சென்று திரும்பிய தாயிற்கு காத்திருந்த அதிர்ச்சி

Published By: J.G.Stephan

09 Apr, 2019 | 12:10 PM
image

பிரேசில் நாட்டில் சகோதரனை கொடூரமாக கொலை செய்து மர்ம உறுப்பை அறுத்தெடுத்து சாப்பிட்ட சகோதரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டை சேர்ந்த தாயொருவர், 5 வயது சகோதரனை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு மகள் கரினா ரோக் (18) பொறுப்பில் விட்டு வெளியில் கடைக்கு சென்றுள்ளார்.

3 மணிநேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய அவர், கதவை திறக்குமாறு மகளை அழைத்துள்ளார். ஆனால் உள்ளிருந்த கரினா கதவை திறக்க மறுத்துள்ளார். தொடர்ந்து தாய் கதவை தட்டிப்பார்த்து,  வெளியே நின்று சத்தமிட்டும், கதவு திறப்படாத நிலையில், பக்கத்து வீட்டு நபரின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு அவருடைய மகன் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலைசெய்யப்ட்டிருப்பதை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இதற்கிடையில் அங்கிருந்து தப்ப முயன்ற கரினாவினை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், விளையாடலாம் என படுக்கைக்கு சிறுவனை அழைத்து சென்ற கரினா தலையணையை வைத்து முகத்தை மூடி கொலை செய்துள்ளதாகவும், அதன்பிறகு அவனுடைய மர்ம உறுப்பை அறுத்து சாப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் மாந்தீரிக வேலைகள் போன்ற சந்தேகத்தினை எழுப்புகின்றன. தடவியல் துறையினர், எறிந்த நிலையில் செல்போன், மெம்மரி கார்டு, ஒரு சிறிய கத்தி மற்றும் கஞ்சா இலையை கண்டுபிடித்துள்ளனர்.

செல்போனை எரித்திருப்பதால் ஆன்லைனில் இருந்த தடயங்களை அழிக்க முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும், கொலை தொடர்பான மேலதிக விசாரணை, பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10