சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்  ‘தர்பார்’ படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கபாலி, காலா, பேட்ட ஆகிய படங்களைத் தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘தர்பார்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை ஏ. ஆர் முருகதாஸ் இயக்குகிறார். ரஜினிகாந்திற்கு நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் ரஜினிகாந்த் பொலிஸாக நடிக்கிறார். இதற்கு முன் ரஜினிகாந்த் 1992 ஆம் ஆண்டில் வெளியான ‘பாண்டியன்’ படத்தில் பொலிஸாக நடித்திருந்தார். அதற்கு பிறகு அவர் பொலிஸாக நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

குறித்த படத்தினை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்குகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்று தெரியவருகிறது.

சுப்பர்ஸ்டாரின் ‘தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் இதை இணையத்தில் வைரலாக்கி, ட்ரென்டிங்கிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.