காலி கூட்டத்தில் மஹிந்த கலந்துகொள்ளமாட்டார்

Published By: Priyatharshan

20 Apr, 2016 | 08:55 AM
image

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் போக்­கிற்கு எதி­ராக எமது நிலைப்­பாடு காணப்­படும் போது ஒரு மேடையில் ஏறி மக்கள் முன் போலி­யான வேஷத்தை காண்­பிக்க முடி­யாது.

எனவே,அழைப்­பிதழ் கிடைத்­தாலும் காலி மே தின கூட்­டத்­திற்கு செல்லப் போவ­தில்லை என கூட்டு எதிர் கட்­சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

ஏற்­க­னவே திட்­ட­மிட்­ட­வாறு கொழும்பில் இடம்­பெ­ற­வுள்ள மே தின கூட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் கூட்டு எதிர்க் கட்­சி­யினர் பங்­கேற்­ப­தற்கு நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற சந்­திப்பின் போது தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன குறிப்­பிட்டார்.

இந்த சந்­திப்பு தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன மேலும் கூறு­கையில்,

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்­துடன் எவ்­வி­தத்­திலும் எம்மால் இணைந்து பய­ணிக்க முடி­யாது. எனவே தான் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக கொழும்பில் உழைக்கும் மக்­களை ஒன்­றுத்­தி­ரட்டி மே தினத்தை நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­துள்ளோம். தற்­போது அழைப்­பிதழ் அனுப்­பி­ய­தற்­காக காலியில் இடம்­பெ­ற­வுள்ள மே தினத்­திற்கு செல்ல முடி­யாது. அர­சாங்­கத்தின் ஜன­நா­யக விரோத போக்கை எதிர்க்கும் நாங்கள் எவ்­வாறு ஒரு மேடையில் இருப்­பது? . இன்­றைய ( நேற்று)சந்­திப்பின் போது காலி மே தினத்­திற்கு செல்­வது சாத்­தி­யப்­பட போவ­தில்லை என்­பது தீர்­மா­னிக்­கப்­பட்­டது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இந்த விட­யத்தை மிகவும் தெளி­வாக அறி­வித்து விட்டார். ஆகவே அவ­ரது தலை­மையில் கொழும்பில் இடம்­பெ­ற­வுள்ள மே தின கூட்­டத்தில் கூட்டு எதிர் கட்­சியின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் கலந்­துக்­கொள்ள உள்­ளனர்.

பொது மக்­க­ளுக்கு ஜன­நா­ய­கத்தை பெற்­றுக்­கொ­டுக்கும் போராட்­டத்தின் ஆரம்ப கட்­டத்­திற்கு வித்­திடும் கடப்­பாடு எதிர் வரும் மே தினம் கூட்டு எதிர்க் கட்­சிக்கு காணப்­ப­டு­கின்­றது. ஆகவே தான் “ஐக்­கிய மே தின­மாக “ இம் முறை மே தினத்தை கருப்­பொ­ரு­ளாக்­கி­யுள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கூட்டு எதிர் கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அனைத்து அர­சியல் கட்­சிகள் மற்றும் தொழிற் சங்­கங்கள் இ சிவில் அமைப்­புகள் கலந்துக் கொள்ள உள்­ளன . குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அவரும் கலந்துக் கொள்­ள­வுள்ளார். அர­சியல் கட்சி பேதங்­களை மறந்து ஒரு இலக்­கிற்­காக அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்­பதே எமது நோக்­க­மாகும். நாடு தற்­போது எதிர் கொண்­டுள்ள நிலை மிகவும் மோச­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

இதனை கருத்தில் கொண்டு அனைத்து இன மக்­களும் ஒன்­றி­ணைய வேண்டும் . குறிப்­பாக கூட்டு எதிர்க் கட்­சியின் ஐக்­கிய மே தின கூட்டம் நாட்டில் ஜன­நா­யக ஆட்­சியை உறு­திப்­ப­டுத்­து­வ­தா­கவும் உழைக்கும் மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான அழுத்­தங்கள் கொடுப்­ப­து­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. எனவே ஜன­நா­ய­கத்தை நேசிக்கும் அனை­வரும் எம்­முடன் அணி திரள வேண்டும்.

எதிர்­வரும் முதலாம் திகதி மே தினத்­தன்று பிற்பகல் 1 மணிக்கு ஊர்வலமும் 3 மணிக்கு நாரேஹன்பிட்டி சாலிகா மைதானத்தில் மே தின கூட்டமும் நடைப்பெறும் . இதில் அனைத்து இன மக்களும் கட்சி பேதமின்றி கலந்துக்கொள்ள வேண்டும் என்பதே கூட்டு எதிர் கட்சியின் விருப்பமாகவும் அழைப்பாகவும் காணப்படுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47