மஸ்கெலியா மல்லியப்பு தோட்டத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட மாணவி மஸ்கெலியா பாடசாலையில் கல்வி பயின்று க.பொ.த சாதாரண தர பரிட்சை தோன்றியவர் என்றும் இவர் க.பொ.த உயர் தரம் கல்வி தொடர இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இம்மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு கொண்டுள்ளார் என அம்மாணவியின்  42 வயதுடைய தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அத்துடன் தற்கொலை செய்துகொண்ட மாணவியை அவரது தாயார் முதலில் கண்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் மரணித்ததுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார்.

இம்மாணவியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.