18 ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞனொருவன் பரிதாபமாக பலியான சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர்ந்த கட்டிடமொன்றிலிருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இதன்போது குறித்த நிர்மாணப்பணியில் வேலைசெய்யும் 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.