நோர்வூட் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்டப் பகுதியில் பெண் தொழிலாளியொருவர், தவறி விழுந்து மரணமாகியுள்ளார்.

டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்டப் பகுதியில் பெண் தொழிலாளியொருவர் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலுக்கு சென்று கொண்டிருந்த வேலையில் திடீரென  தவறி விழுந்ததில் குறித்த பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இச்சம்பவம், இன்று திங்கட்கிழமை (08.04.2019) காலை 08.30மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கீழே விழுந்த குறித்த தொழிலாளியை, டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டியில் கொண்டுச் சென்ற போதும்,  குறித்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், குறித்தப் பெண், 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்தப் பெண்ணின், சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில்,  குறித்த பெண் தொழிலாளியை , முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றமை தொடர்பில், தோட்ட நிர்வாகத்திற்கு வழங்கபட்ட நோயாளர் காவுவண்டிக்கு என்ன நடந்தது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளமையும், குறிப்பிடதக்கது