சிவனொலிபாதமலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு மிகவும் சூற்சகமான முறையில் ஹெராயின் போதைப் பொருளை விற்பனை செய்த ஐவரை  ஹட்டன் வலய குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினர்  நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஐவரில் பிரதான சந்தேக நபரிடம் இருந்து 760 மில்லி கிராம் அடங்கிய 4 பொதிகளும் ஏனைய சந்தேக நபர்களிடமிருந்து 1080 மில்லி கிராம் பொதிகளும் கைப்பற்றியதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் நல்லத்தண்ணி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களை இன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொலிஸார்  மேலும்  தெரிவித்தனர்.