பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தினால் பற்றுறுதியளிக்கப்பட்ட 14,000 வீடுகளினுள், 1000 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு 3,000 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய வீட்டுத் தொகுதிகளுக்காக இலங்கை அரசாங்கத்தால் காணிகள் அடையாளம் காணப்பட்ட பின்னர், உடனடியாக அவற்றுக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுமென இந்திய உயர் ஸ்தானினர் தரண் ஜித் சிங் சந்து தெரிவித்தார்.
மாத்தறை, இன்தோலா தோட்டத்தில் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில், நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண் ஜித் சந்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயர் ஸ்தானிகர் மேலம் தனது உரையில்,
சுபீட்சமும் அபிவிருத்தியும் நோக்கிய இலங்கை மக்களின் பயணத்தில் ஒன்றிணைந்து பங்குபற்றுவதற்கான இந்திய அரசாங்கத்தினதும் மற்றும் மக்களினதும் பற்றுறுதியை வலியுறுத்தினார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தினால் பற்றுறுதியளிக்கப்பட்ட 14,000 வீடுகளினுள், 1000 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு 3,000 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய வீட்டுத் தொகுதிகளுக்காக இலங்கை அரசாங்கத்தால் காணிகள் அடையாளம் காணப்பட்ட பின்னர், உடனடியாக அவற்றுக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.
இந்நிகழ்வில், நிதியமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோருடன் இந்திய உயர் ஸ்தானினர் தரண்ஜித் சிங் சந்து இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் 50 புதிய வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
5 பாராளுமன்றம் மற்றும் தென் மாகாண சபை என்பவற்றின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கை நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பெருந்தோட்ட மற்றும் தோட்ட முகாமைத்துவம் மற்றும் இந்தோல தோட்டத்திலிருந்தான பெரும் எண்ணிக்கையிலான மக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
இந்த வீட்டுத் தொகுதிகளுக்கான அமைவிடங்கள் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களையும் சப்பிரகமுவ மாகாணத்தில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களையும் மற்றும் தென் மாகாணத்தில் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்குகின்றன.
இந்த வீடுகள், இந்திய அரசாங்கத்தின் சார்பாக ஐ.நா. ஹபிட்டாட், சர்வதேச செஞ்சிலுவை மற்றும் சர்வதேச செம்பிறைச் சங்க சம்மேளனம் (IFRC)/ இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRC), மனிதநேயத்திற்கான ஹபிட்டாட், இலங்கை மற்றும் இலங்கை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய சுயாதீன நடைமுறைப்படுத்தும் முகவரமைப்புகளிடமிருந்தான தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் வீட்டுரிமையாளர்களினால் முன்னெடுக்கப்படும் ஒரு புத்தாக்கச் செயன்முறையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இந்தோல தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளுக்கான நடைமுறைப்படுத்தும் முகவரமைப்பு சர்வதேச செஞ்சிலுவை (IFRC)/ மற்றும் சர்வதேச செம்பிறைச் சங்க சம்மேளனம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRC) என்பவையாகும்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழான வீடுகளுக்கு மேலதிகமாக, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உட்பட தென் மாகாணத்தில் 50 மாதிரிக் கிராமங்கள் கீழ் மேலும் 1,200 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. தென் மற்றும் மேல் மாகாணங்களில் இந்திய உதவியின் கீழ் 1990 இலவச அவசர அம்பியுலன்ஸ் சேவைகளின் முதலாவது நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதன் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, அச்சேவை தற்போது நாடு முழுவதிலுமாக விரிவாக்கப்பட்டு வருகின்றது.
மாத்தறையில் ருகுணுப் பல்கலைக் கழகத்தில் மிகப் பெரிய பல்கலைக் கழக கேட்போர் கூடம் உட்பட, பல்வேறு துறைகளில் சுகாதாரம், கல்வி, திறன் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, தொழில் பயிற்சி உட்பட இலங்கை முழுவதிலுமாக 70 இற்கு மேற்பட்ட மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திச் செயல்திட்டங்களை இந்தியா மேற்கொள்கிறது. 20 அத்தகைய செயல்திட்டங்கள் தற்போது நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM