வீதியோரம் நிறுத்தி வைக்கபட்டிருந்த காரின் கண்ணாடியினை மோட்டார் சைக்கிள் சென்ற நபர்கள் உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். 

யாழ்.கந்தர்மட சந்திக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு காரில் வந்த நபர் ஒருவர் வீதியோரமாக காரை நிறுத்தி விட்டு வர்த்தக நிலையத்திற்குள் சென்று பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்தார். 

அவ்வேளை வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவரில் , பின்னால் அமர்ந்து வந்தவர் தனது தலைக்கவசத்தால் காரின் கண்ணாடியினை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி சென்றனர். 

குறித்த தாக்குதல் சம்பவம் வர்த்தக நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளது. அதன் மூலம் தாக்குதல் மேற்கொண்ட நபரை தெளிவாக கார் உரிமையாளர் அடையாளம் கண்டுள்ளார். 

அதனை தொடர்ந்து தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.