இலங்கைக்கு இரு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்தையிலீடுபடவுள்ளார்.

இந்த பேச்சுவார்ததையின் போது இந்திய கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இலங்கைக்கு இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் இலங்கை வந்திருந்தனர்.

இருநாடுகளுக்கும் இடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் பாதுகாப்பு விவாதத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு  வருகைதந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.