டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு இன்று அதிகாலை நாடுகடத்தப்பட்ட இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், அவர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்றனர்.

மொஹம்மட் ஜாபிர் மொஹம்மட் முஃபா மற்றும் மொஹம்மட் நசீம்  மொஹம்மட் பைஸர் ஆகிய இருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடுகடத்தப்பட்ட இருவரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.