தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்ல‍ை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அது தொடர்பான சுற்றுநிரூபத்தையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்து புதிய கல்வித்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, பிள்ளைகள் தமது திறமைகளுக்கேற்ப எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவாகும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தரார்.

இந்நிலையில் அதற்கிணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்ல‍ை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.