8 கிலோ கேரளா கஞ்சாவுடன்  இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில்  நேற்று (06) இரவு முல்லைத்தீவு முறுகண்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். 

கஞ்சாவை விற்பனைக்காகக் கொண்டு சென்ற வேளையில் யாழ்ப்பாண மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.