இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 4.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்  6.1 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும்  விடுக்கப்படவில்லையெனவும்,பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.