வவுனியா சிறைச்சாலைக்கு ஐ. நா. அதிகாரிகள் இன்று (07.04) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற  ஐ.நா அதிகாரிகள் 5 பேர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடனும் சந்திப்பை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 1 மணி நேரம் சிறைச்சாலைக்குள் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் குறித்த ஐ. நா அதிகாரிகள் குழு அங்கிருந்து சென்றிருந்தது.

குறித்த விஜயம் தொடர்பாக ஐ. நா அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காத ஐ. நா. அதிகாரிகள் தமது விஜயம் தொடர்பாக செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தனர்.