வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நகரை டெங்கு நுளம்பிலிருந்து மீட்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்ட சிரமதானம் இன்று காலை பழைய பஸ் நிலையம், பஜார் வீதிகளில் வன்னி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். எஸ். எம் தென்னக்கோனின் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற நகரின் சிரமதானத்தில் பஜார் வீதி, பழைய பஸ் நிலையம் போன்ற பகுதிகளிலிருந்து சிரமதானத்தில் டெங்கு நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு துப்பரவு செய்யும் நடவடிக்கையில்  பொலிஸார், வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குறித்த  சிரமதான பணியில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி அசோக் பிரியந்த,  நகரசபை உப நகர பிதா எஸ்.குமாரசாமி,வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன், செயலாளர் ஆ. அம்பிகைபாகன், பொருளாலர், 50க்கும் மேற்பட்ட பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இச் செயற்பாடு பொலிஸாரின் பங்குபற்றுதலுடன் புதிய பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.